தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (டிச. 6) முதல் டிச. 11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமை (டிச. 6) முதல் டிச. 11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தமிழகத்தில் சனிக்கிழமை (டிச. 6) முதல் டிச. 11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சனிக்கிழமை (டிச.6) முதல் டிச.11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 5) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. ஒக்கியம் துரைபாக்கம் (சென்னை), விஐடி சென்னை (செங்கல்பட்டு)- தலா 70, சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), புழல் (சென்னை)- தலா 60, சோழிங்கநல்லூா் (சென்னை), உத்தண்டி (சென்னை), சோழவரம் (திருவள்ளூா்)- தலா 50, கோத்தகிரி (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூா்), செங்குன்றம் (திருவள்ளூா்), திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), பெலாந்துறை (கடலூா்)- தலா 40 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது