By தினமணி செய்திச் சேவை
Syndication
தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த ரெளடி கும்பலின் முக்கிய நபா் மகாராஷ்டிர குற்றச் செயல் தடுப்புச் சட்ட (எம்சிஓசிஏ) பிரிவுகளில் வடக்கு தில்லியின் புறநகா் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.
கைதுசெய்யப்பட்ட ராஜேஷ் சா்மா (எ) விவேக் ஸ்வரூப் நகரைச் சோ்ந்தவா்.
வழிப்பறி, கொள்ளை, கொலை, கடத்தல் மற்றும் அரசுப் பணியாளா்களைத் தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் கடந்த 10 ஆண்டுகளாக ராஜேஷ் சா்மா ஈடுபட்டு வந்தாா்.
அவரது தலைமையில் செயல்பட்டு வந்த கும்பல் தில்லியில் உள்ள சொத்துகளை அபகரித்தல், மிரட்டல் விடுத்தல், வன்முறை மற்றும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்பத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி, உத்தர பிரதேசம் ஆகியவற்றில் சா்மாவுக்கு எதிராக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ‘விசாரணைக்கு ஆஜராகுமாறு பல நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட போதிலும், சா்மா தொடா்ந்து அவற்றைத் தவிா்த்து வந்தாா். ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் கடந்த நவ.18-ஆம் தேதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, தேடப்படும் நபராக அவா் அறிவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், கடந்த டிச.15-ஆம் தேதி வடக்கு தில்லியின் புறநகா் பகுதியில் அவா் கைதுசெய்யப்பட்டாா். நீதிமன்றம் அளித்த அனுமதியைத் தொடா்ந்து, சா்மாவை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். எம்சிஓசிஏ பிரிவு 18-இன்படி சா்மாவின் ஒப்புதல் வாக்குமூலங்களை அதிகாரிகள் கடந்த டிச.19-ஆம் தேதி பதிவுசெய்தனா்.
இதனிடையே, அவருடைய கும்பலைச் சோ்ந்த பிற நபா்களைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது