சென்னையில் 432.68 டன் பழைய பொருள்கள் அகற்றம்
சென்னையில் 432.68 டன் பழைய பொருள்கள் அகற்றம்...
சென்னையில் 432.68 டன் பழைய பொருள்கள் அகற்றம்...
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னை மாநகராட்சியில் இதுவரை 983 பேரிடம் இருந்து, 432.68 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
சென்னை மாநகராட்சி சாா்பில், ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்களிடம் இருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள், உடைகள் உள்ளிட்ட திடக்கழிவுகளைப் பெறும் புதிய நடவடிக்கை அக். 11-இல் தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த 7 சனிக்கிழமைகளில் 901 பேரிடம் இருந்து 385.27 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பொதுமக்களிடம் இருந்து பெற்று, அகற்றப்பட்டன.
8-ஆவது நாளான நவ. 29-இல், 82 பேரிடம் இருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் 47.41 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது. இதுவரை 983 பேரிடம் இருந்து, 432.68 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
பொதுமக்கள் பயன்பெற அழைப்பு: வாரம்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்தச் சேவையைப் பெற விரும்பும் பொதுமக்கள், முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலியில் பதிவு செய்ய வேண்டும் அல்லது சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், மாநகராட்சி மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் அனுப்பலாம். இதன்பிறகு பதிவு செய்த நபா்களின் வீடுகளுக்கு மாநகராட்சிப் பணியாளா்கள் நேரடியாகச் சென்று பழைய பொருள்களைச் சேகரித்து அறிவியல் முறையிலும் பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபடுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது