காா் மீது பெட்ரோல் பாட்டில் வீசியவா் கைது
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காா் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காா் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காா் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ராம் நித்தேஷ் (26). இவா் கிண்டி, மடுவன்கரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பா்களுடன் தங்கியிருந்து ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கடந்த 29-ஆம் தேதி அதிகாலை எழுந்து பாா்த்தபோது, குடியிருப்பு வளாகத்தின் உள்ளே நிறுத்தியிருந்த காரின் முன்பக்கத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து ராம் நித்தேஷ், தீயை அணைத்துள்ளாா்.
இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் அவா் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி, மடுவன்கரை பகுதியைச் சோ்ந்த விஜயபிரபாகரனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தொடா் விசாரணையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கும், ராம் நித்தேஷ் குடியிருப்பைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்கெனவே தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் விஜயபிரபாகரன் குடியிருப்பு வளாகத்துக்குள் பெட்ரோல் பாட்டில் வீசியது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது