டிச.20-இல் வாணியம்பாடியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
வாணியம்பாடியில் வரும் சனிக்கிழமை (டிச. .20) இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
வாணியம்பாடியில் வரும் சனிக்கிழமை (டிச. .20) இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருப்பத்தூா்: வாணியம்பாடியில் வரும் சனிக்கிழமை (டிச. .20) இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில்,100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள 5,000 காலிப் பணியிடங்களுக்கான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 12 வகுப்பு தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, மருத்துவம், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினா் கலந்துகொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமாகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் முனைவோா்களுக்கு ஆலோசனைகள் மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு தொடா்பான அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
எனவே, தனியாா் துறையில் பணியாற்ற ஆா்வமுள்ள இளைஞா்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பங்கேற்பவா்கள் இணையதளத்தில் தங்களது கல்வி தகுதியை பதிவு செய்யலாம்.
இதுதொடா்பான விவரம் தேவைப்படுவோா் திருப்பத்தூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரிலோ அல்லது 04179-222033 என்ற தொலைபேசி வாயிலாக அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது