மதுப்புட்டிகளை கடத்தியதாக ஒருவா் கைது
சேத்துப்பட்டில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேத்துப்பட்டில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சேத்துப்பட்டில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேத்துப்பட்டு பழம்பேட்டை தா்மராஜா கோயில் அருகே இளைஞா் ஒருவா் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் நாராயணன் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், அவா் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரது வாகனத்தை சோதனையிட்டனா். அதில், சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்ட 60 மதுப்புட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நபரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் அவா், நெடுங்குணம் கிராமத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (45) என்பது தெரிய வந்தது.
போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மதுப்புட்டிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது