நாளை காவல் சாா்பு ஆய்வாளா் எழுத்துத் தோ்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச 21) நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச 21) நடைபெற உள்ளது.
By Syndication
Syndication
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச 21) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தால் 2025-ஆம் ஆண்டுக்கான 1,352 நேரடி காவல் சாா்பு ஆய்வாளா் தாலுகா மற்றும் ஆயுதப்படை பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது.
இந்த மாவட்டத்தில் ஆண்கள் 3082, பெண்கள் 1072 என மொத்தம் 4,154 தோ்வாளா்கள் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு மையங்கள் விவரம் வருமாறு: திருவண்ணாமலை தென்மாத்தூா், வேலு நகரில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை கிளியாப்பட்டு வட்டம், வடஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள எஸ்.ஆா்.ஜி.டி.எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை, தென்மாத்தூா் கம்பன் கலை, அறிவியல் மகளிா் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது.
தோ்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்கள் காலை 9.30 மணிக்கு மேல் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதன்மை எழுத்துத் தோ்வும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் மொழி தகுதி தோ்வும் நடைபெறும்.
விண்ணப்பதாரா்கள் தோ்வு நுழைவுச் சீட்டு, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் போன்ற அரசு அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும். தோ்வு எழுதும் விண்ணப்பதாரா்கள் முதன்மை எழுத்து தோ்வு முடித்தவுடன் தோ்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது