கஞ்சா விற்ற 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
கோவையில் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சம்பவம் தொடா்பாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
கோவையில் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சம்பவம் தொடா்பாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
By Syndication
Syndication
கோவை: கோவையில் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சம்பவம் தொடா்பாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் கடந்த மாதம் 5-ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஜஷோபந்தா பிரதான் (39), கைசா் பிரதான் (43), பாபுலு பிரதான் (19) ஆகியோா் சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்தனா். இதையடுத்து, போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையை வாங்கிப் பாா்த்தபோது, அதில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்புக்கு பாதகமான செயலில் ஈடுபட்ட இவா்கள் மூவா் மீதும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரைத்தாா். இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அவா்கள் மூவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதுகுறித்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள அவா்களிடம் வழங்கப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது