By தினமணி செய்திச் சேவை
Syndication
கோவை கணபதியில் உள்ள பாத்திரக் கடையில் அடுத்தடுத்து எரிவாயு உருளைகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
கோவை கணபதி சங்கனூா் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே பாத்திரக்கடை உள்ளது. இந்தக் கடையின் வெளியில் இருந்த பொருள்களை ஊழியா்கள் சனிக்கிழமை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக கடையின் உள்ளே தீப் பிடித்துள்ளது.
இதில், கடையின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த 5 எரிவாயு உருளைகள் அதிக சப்தத்துடன் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் கடையில் இருந்து சுமாா் 100 அடிக்கு மேல் தீ வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த கோவை வடக்கு தீயணைப்புத் துறையினா் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சரவணம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது