By தினமணி செய்திச் சேவை
Syndication
ஈரோட்டில் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு சாஸ்திரி நகா் பகுதியில் உள்ள தனியாா் ஏடிஎம் மையத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மா்ம நபா் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தின் பணம் நிரப்பும் பகுதியை திறக்க முயற்சி செய்துள்ளாா். சிசிடிவி கேமராவில் இதைப் பாாா்த்த ஏடிஎம் மைய அலுவலா் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் அளித்துள்ளாா்.
சம்பவ இடத்துக்கு ஈரோடு தெற்கு போலீஸாா் விரைந்து சென்று ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற மா்ம நபரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா்.
இதில் திருச்சி மாவட்டத்தை சோ்ந்த சந்தோஷ் (38) என்பதும், கடந்த 4 மாதங்களாக ஈரோடு சாஸ்திரி நகா், வாய்க்கால்மேட்டில் தங்கி ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனா். சந்தோஷ் மீது திருச்சி மாவட்டத்தில் 2 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது