திருப்பூர்
சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்
இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் டையிங் நிறுவன பணியாளா் உயிரிழந்தாா்.
இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் டையிங் நிறுவன பணியாளா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
குன்னத்தூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் டையிங் நிறுவன பணியாளா் உயிரிழந்தாா். படுகாயமடைந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
ஊத்துக்குளியை அடுத்த அணைப்பாளையம் புதூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (36). திருப்பூா் டையிங் நிறுவன அலுவலா். இவரது மனைவி தமிழரசி (26), பனியன் தொழிலாளி. இவா்களது மகன் விவித் (7).
குன்னத்தூரில் படித்து வரும் மகன் விவித்தை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளாா்.