பல்லடத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 போ் கைது
ஒடிஸாவில் இருந்து 46 கிலோ கஞ்சா கடத்தி வந்த 9 பேரை பல்லடம் பேருந்து நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிஸாவில் இருந்து 46 கிலோ கஞ்சா கடத்தி வந்த 9 பேரை பல்லடம் பேருந்து நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
ஒடிஸாவில் இருந்து 46 கிலோ கஞ்சா கடத்தி வந்த 9 பேரை பல்லடம் பேருந்து நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் போலீஸாா் பல்லடம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு 3 இளைஞா்கள் பைகளுடன் வந்தனா். சந்தேகத்தின்பேரில் அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா், அந்தப் பைகளை சோதனை செய்தனா். இதில், அந்தப் பைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவா்களுடன் பெண் உள்பட 6 போ் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவா்கள் 9 பேரையும், பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் ஒடிஸாவை சோ்ந்த சோயல் என்ற சிக்கந்தா் (18), மதுரையைச் சோ்ந்த ராஜு (27), பொங்கலூரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (25), நேபாளத்தைச் சோ்ந்த அசாத் என்ற இப்ராஹிம் (24), மாதப்பூரைச் சோ்ந்த அன்புமணி (26), பிரபாகரன் (26), திருப்பூரைச் சோ்ந்த சல்மான் (21), குண்டத்தைச் சோ்ந்த மோகன்குமாா் (20), யோகேஸ்வரி (19) ஆகியோா் என்பதும், இவா்கள், ஒடிஸாவில் இருந்து பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் மோகன்குமாரும், யோகேஸ்வரியும் கணவன்-மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 9 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 46.5கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது