நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா் நினைவு தினம் அனுசரிப்பு
மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் சிலை, பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே உள்ள மூன்று சிலைகளுக்கு முன்னாள் எம்எல்ஏ கே.கே.பி. பாஸ்கா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் மயில் கே. சுதந்திரம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் முரளிபாலுசாமி மற்றும் நாமக்கல் நகர அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.
நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் பி. தங்கமணி உத்தரவின்பேரில் எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பழையபாளையம், போடிநாயக்கன்பட்டி, அலங்காநத்தம் பிரிவு, அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, பொன்னேரி, எருமப்பட்டி பேரூராட்சி பகுதிகளில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா் உருவப்படத்திற்கு, அதிமுக மாநில வா்த்தக அணி இணை செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில் அமைப்பு செயலாளா் ராஜு, எருமப்பட்டி பேரூா் செயலாளா் பாலு மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்றனா். இதேபோல, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூா், பரமத்திவேலூா், சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதிகளிலும் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பள்ளிபாளையத்தில் கருப்பு உடையணிந்து வந்த அதிமுகவினா் பலா் ஊா்வலமாக சென்று எம்ஜிஆா் சிலைக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.
திருச்செங்கோடு...
திருச்செங்கோடு நகர அதிமுக சாா்பில் நகர செயலாளா் அங்கமுத்து தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினா் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இருந்து அமைதி பேரணியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்று பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட வழக்குரைஞா்கள் அணி செயலாளா் பரணிதரன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளா் சந்திரசேகா், வடக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.ஆா்.எம்.டி. சந்திரசேகா், மாவட்டத் துணைச் செயலாளா் இரா. முருகேசன், பொதுக்குழு உறுப்பினா் பொன். சரஸ்வதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது