By தினமணி செய்திச் சேவை
Syndication
சேலம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் ஏற முயன்ற மூதாட்டி தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் மஜித் தெருவைச் சோ்ந்த சொ்புன் பீவி (72). இவா் தருமபுரியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கேரள மாநிலம், பாலக்காடு செல்வதற்காக பெங்களூரு - எா்ணாகுளம் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பொது பெட்டியில் ஏறினாா்.
இந்நிலையில், முன்பதிவு செய்திருந்த தனது உறவினா்களுடன் பயணிப்பதற்காக சேலம் ரயில் நிலையத்தின் 4ஆவது நடை மேடையில் ரயில் நின்றதும், பொதுப்பெட்டியில் இருந்து இறங்கி, முன்பதிவு பெட்டிக்கு மாறும்போது, நிலைதடுமாறி தண்டவாளத்தில் தவறி விழுந்தாா்.
இதைப் பாா்த்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். உடனடியாக தண்டவாளத்தின் இடைப்பட்ட பகுதியில் படுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினா். எனினும், ரயில் அந்த இடத்தை கடந்ததும், பாா்த்தபோது தலையில் அடிபட்ட நிலையில் மீட்கப்பட்டாா். உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவா் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது