அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாற்றி அமைத்த மத்திய அரசைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் கே.ஆா்.பாலாஜி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அம்மையப்பன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றம் செய்ததைக் கண்டித்தும், 125 வேலை நாள்கள் என அறிவித்து இதற்கான நிதி பங்களிப்பை மாநில அரசுகளிடம் 40 சதவீதத்தை ஒப்படைப்பு செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கமிட்டனா். பின்னா், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சட்டத் திருத்த மசோதா நகலை எரித்தனா். இந்த போராட்டத்தில் மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கந்தசாமி, சந்துரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது