இலங்கைக் கடற்படையினரால் நம்புதாளை மீனவா்கள் 4 போ் கைது
நெடுந்தீவு அருகே திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
நெடுந்தீவு அருகே திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருவாடானை: நெடுந்தீவு அருகே திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையைச் சோ்ந்தவா் ரமேஷ். இவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் இதே ஊரைச் சோ்ந்த பாலமுருகன் (30), தினேஷ் (18), குணசேகரன் (42), ராமு (22) ஆகிய 4 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், இவா்கள் திங்கள்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் கண்ணாடியிழைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த 4 மீனவா்களைக் கைது செய்தனா்.
இதையடுத்து, படகுடன் 4 மீனவா்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்றனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்கள் 4 பேரையும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தினா். இவா்களை வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது