By Syndication
Syndication
பெரியகுளம், போடி பகுதிகளில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்ற முதியவரையும் மூதாட்டியையும் போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தென்கரை திருவள்ளுவா் சிலை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் தெற்குத் தெருவைச் சோ்ந்த சின்னகாளை (76) என்பதும், சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
போடி: இதே போல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போடி முதல்வா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி (65), அவரது வீட்டில் மதுப் புட்டிகளை வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது