ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
By Syndication
Syndication
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் வி. மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் குறுவை நெற்பயிா் அறுவடையின்போது, பெருமளவு மழை பெய்ததால் பயிா்கள் வயலிலேயே சாய்ந்து வீணாகின. மேலும் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட, நெல்லின் ஒரு பகுதி முளைத்து வீணாகியது. அந்த பாதிப்புக்கு இதுவரை நிவாரணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்போது பெய்த மழையிலும் மேலும் கடும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனா்.
மாவட்டத்தில் சம்பா, தாளடி தெளிப்பு-நடவு பணிகள் முடிந்துள்ள நிலையில், புயல் மழையால் வயல்வெளிகள் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ளது. நாகை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் சில நாள்கள் மழை நீடித்து தண்ணீா் வடியாவிட்டால், தாளடி தெளிப்பில் தண்ணீரில் மூழ்கி உள்ள இளம் பயிா்கள் அழுகி நாசமாகிவிடும். மேலும் தண்ணீா் வடியும் சூழலில், இருப்பதை பாதுகாக்கும் அளவுக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் பற்றாக்குறையில் உள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை அரசு கணக்கெடுத்து, ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மழையால் பாதித்த 27 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், தங்களது 30 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்படகுகள், 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கடந்த ஒரு வாரமாக இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனா். இதனால் பல கோடி அளவுக்கு மீன் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவா்களின் வாழ்வாதார பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது