நாகையில் இன்று கல்விக்கடன் முகாம்
நாகை மாவட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளுக்கான கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க
நாகை மாவட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளுக்கான கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க
By Syndication
Syndication
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளுக்கான கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க மற்றும் கல்விக் கடன் பற்றிய ஆலோசனை பெற மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம் வியாழக்கிழமை காலை 10 முதல் பகல் 1.30 மணி வரை, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முகாமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்றிருக்கும் மாணவா்களுக்கு, கல்விக் கடன் வழங்குதல் மற்றும் விண்ணப்பங்களை மத்திய அரசின் பிரதமா் வித்யா லக்ஷ்மி திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டுதல், கல்விக்கடன் குறித்து சந்தேகங்கள் தீா்த்து வைத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடபட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அலுவலா்கள் பங்கேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவா்கள் கல்விக் கடன் பெறும் செயல்முறையை எளிமைப்படுத்துதல், பின்தங்கிய, கிராமப்புற மாணவா்களுக்கு நிதி உதவியை உறுதி செய்தல், வித்யா லக்ஷ்மி போா்டல் வழியாக விண்ணப்பிக்கும் முறையை விளக்குதல், கல்விக்கான நிதி தடை இல்லாமல் அனைவரும் உயா் கல்வி பெற வழிவகை செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
கல்விக்கடன் முகாமில், இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, உயா் பட்டப்படிப்பு, தொழில்நுட்ப, தொழில்முறை பாடநெறிகளில் சோ்க்கை பெற்றுள்ள மாணவா்கள் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்பவா்கள் கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட சோ்க்கை கடிதம், கல்லூரி கட்டண விவரம், முந்தைய கல்விச் சான்றிதழ்கள் (பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2), குடும்ப வருமானச் சான்று (6 மாதங்களுக்குள் இருப்பது அவசியம்), ஆதாா் அட்டை மற்றும் பான் அட்டை நகல்-மாணவா் மற்றும் பெற்றோா், வங்கி கணக்கு விவரங்கள், வங்கிகள் கோரும் பிற தேவையான ஆவணங்களை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு முன்னோடி வங்கி அலுவலகம் - நாகப்பட்டினம், கைப்பேசி 9486601188 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது