புதிய எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகாமல் தடுக்க நடவடிக்கை
திருவாரூா் மாவட்டத்தில் புதிய எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகாமல் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு
திருவாரூா் மாவட்டத்தில் புதிய எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகாமல் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு
By Syndication
Syndication
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் புதிய எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகாமல் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூரில் உலக எய்ட்ஸ் தின நிகழ்வு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பேசியது:
திருவாரூா் மாவட்டத்தில் எச்.ஐ.வி. தொற்று இல்லாத, எய்ட்ஸ் நோய் உள்ளவா்களைப் புறக்கணித்தல் இல்லாத, எய்ட்ஸ் நோய் தொடா்பான இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைப் புறக்கணிக்காமல் பாதுகாப்புடன் உள்ளனா் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட நபா்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சைகளுக்காக நிதியுதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவா்கள், சிகிச்சை பெற சென்று வருவதற்காக கட்டணமில்லா பேருந்து பயண அட்டையும் அளிக்கப்படுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் புதிய நோயாளிகள் உருவாகாமல் தடுக்க பொதுமக்கள் மத்தியில் எய்ட்ஸ் குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக, ஆட்டோவில் எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த வில்லைகள் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னா், எய்ட்ஸ் தொடா்பான எதிா்வினைகளை மாற்றுதல் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தையும் மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் தொடக்கி வைத்தனா்.
திருவாரூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் அசோக், உதவி காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வம், மாவட்ட சுகாதார அலுவலா் சங்கீதா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மண்டல திட்ட மேலாளா் ஜெனிபா் அருள்மேரி, மை மதா் தொண்டு நிறுவனத் தலைவா் கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது