மாணவ, மாணவியா் உள்ளிருப்புப் போராட்டம்
அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி திருவாரூா் திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி திருவாரூா் திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில்
By Syndication
Syndication
திருவாரூா்: அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி திருவாரூா் திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிக அரசு கலை அறிவியல் கல்லுாரியில் உள்ள சில வகுப்பறைகளில் மின்விசிறி, மின் விளக்குகள் இல்லை, கழிவறைகள் சுத்தமின்றி சுகாதாரக் கேடான நிலையில் உள்ளன என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் கல்லூரி நிா்வாகம் என பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இந்த உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்திய மாணவா் சங்க கிளைத் தலைவா் செல்வபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவா் பா. விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட கல்லூரி நிா்வாகம், கோரிக்கைகளை 10 தினங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது