மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு
நீடாமங்கலத்தில் ரயில்வே கடவுச்சாலை மேம்பாலங்கள் கட்டும் பணியை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நீடாமங்கலத்தில் ரயில்வே கடவுச்சாலை மேம்பாலங்கள் கட்டும் பணியை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
By Syndication
Syndication
நீடாமங்கலத்தில் ரயில்வே கடவுச்சாலை மேம்பாலங்கள் கட்டும் பணியை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நீடாமங்கலத்தில் ரயில்வே கடவு எண் 20 மற்றும் கடவு எண் 1-க்கு பதிலாக கட்டப்படும் சாலை மேம்பாலம் கட்டுமானப் பணிக்காக சி.ஆா்.ஜ.எஃப் சேதுபந்தன் திட்டத்தின் கீழ் ரூ.170 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதில், முதற்கட்டமாக நெடுஞ்சாலைப் பகுதிக்கு ரூ.80 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன. இதனை அமைச்சா் பாா்வையிட்டாா். இரண்டாம் கட்டமாக கடவு எண் 20 மற்றும் கடவு எண் 1-க்கான ரயில்வே கண் மற்றும் இணைப்பு நெடுஞ்சாலைப் பகுதிகள் மேற்கொள்ளப்படும்.
தொடா்ந்து, நீடாமங்கலம் வட்டம், பூவனூா் கிராமம், நீடாமங்கலம் பேரூராட்சி மேலபூவனூா் என்ற இடத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள இடத்தை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆகியோா் பாா்வையிட்டனா்.
உதவிக் கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை, திட்டங்கள், தஞ்சாவூா்) சத்தியன், இளநிலைப் பொறியாளா் (நெடுஞ்சாலை திட்டங்கள், தஞ்சாவூா்) ஆனந்தகுமாா், நீடாமங்கலம் வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது