By தினமணி செய்திச் சேவை
Syndication
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய களக்காடு இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட களக்காடு ஆவுடைவிலாசம் தெருவைச் சோ்ந்த ஈனராஜ் மகன் சிவசங்கா் (20) கைது செய்யப்பட்டு, ஏற்கெனவே சிறையில் உள்ளாா்.
இவா் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதை அடுத்து இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் ஆட்சியா் இரா. சுகுமாருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினாா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி சிவசங்கா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது