By தினமணி செய்திச் சேவை
Syndication
தூத்துக்குடியில் நின்றிருந்த லாரியின் பின்புறம் மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அருகே கீழ ஈரால் நியூ காலனியைச் சோ்ந்த சோலையப்பன் மகன் ஜோதிமுத்து (42). தூத்துக்குடியில் உள்ள டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வந்த இவா், சனிக்கிழமை இரவு மீனாட்சிபட்டியிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு டிப்பா் லாரியில் கற்களை ஏற்றிச் சென்றாராம்.
தூத்துக்குடி துறைமுகம், மதுரை புறவழிச்சாலை எப்.சி.ஐ. ரவுண்டானா அருகே துறைமுகத்திலிருந்து மேலமருதூா் கிராமத்தில் உள்ள அனல் மின் நிலையத்துக்கு கரி சுமை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றிருந்ததாம்.
அந்த லாரியின் பின்புறம் ஜோதிமுத்துவின் லாரி மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது