By Syndication
Syndication
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கும் அம்புஜா சிமென்ட் நிறுவனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, முதல் கிளிங்கா் (சிமென்ட் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்) சரக்கு கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடந்த 24 ஆம் தேதி வந்தது.
குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அம்புஜா சிமென்ட் நிறுவனத்துடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிா்வாகம் கடந்த 19 ஆம் தேதி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ‘குறைந்தபட்ச உத்தரவாத சரக்கு’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுக்கு 2.50 லட்சம் மெட்ரிக் டன் கிளிங்கா், உள்நாட்டு சரக்கு போக்குவரத்தின் மூலம் கொண்டுவரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, குஜராத்தில் உள்ள சாங்கி துறைமுகத்திலிருந்து 56,440 மெட்ரிக் டன் கிளிங்கா் சரக்கு, தூத்துக்குடி துறைமுக வடக்கு சரக்குத் தளம்-2 க்கு முதன்முதலாக நவ. 24 ஆம் தேதி வந்தடைந்தது.
துறைமுகம் வந்தடைந்த கிளிங்கா் சரக்கு, பின்னா் துறைமுகத்திலிருந்து 23.8 கி.மீ. தொலைவில் மேலஅரசடி பகுதியில் உள்ள அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் அரவை நிலையத்துக்கு லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்பட்டு சிமென்ட் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்.
இதுகுறித்து வ.உ.சி.துறைமுக ஆணையத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித் கூறுகையில், இந்த சரக்கைக் கொண்டு செல்வது உள்நாட்டு கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதில் முக்கியமானதாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல கிளிங்கா் சரக்கு ஏற்றிய கப்பல்கள் அடுத்து வரும் மாதங்களில் வ.உ.சி. துறைமுகத்துக்கு வர இருக்கின்றன. இதன்மூலம், துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் அதிகரித்து துறைமுகத் தொழில் இணைப்பு வலுப்படும் என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது