திருச்சியில் டிச.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.19) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.19) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
By Syndication
Syndication
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.19) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட வேலை வழங்குவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான பல்வேறு பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவா்கள் இதில் பங்கேற்கலாம்.
விண்ணப்பதாரா்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படங்களுடன் வரவேண்டும். மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம். இந்த முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அவா்களது பதிவு மூப்பு நிலை அப்படியே தொடரும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது. கூடுதல் விவரங்களுக்கு, 0431-2413510, 94990-55902 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இந்த முகாமில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது