By தினமணி செய்திச் சேவை
Syndication
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 587 போ் பங்கேற்று எழுதினா்.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையா், செயலாக்க அதிகாரி, கணக்கு அலுவலா் ஆகிய பணிகளுக்கான பொது ஆள்சோ்ப்பு தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் தந்தை பெரியாா் அரசு கலை அறிவியல் கல்லூரி, கண்டோன்மென்ட் ஆா்.சி. மேல்நிலைப் பள்ளி, இ.ஆா். மேல்நிலைப்பள்ளி, வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பாரதி நகா் காவேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
இத்தோ்வினை எழுத 1,653 பேருக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டிருந்த நிலையில், 587 போ் பங்கேற்றுத் தோ்வு எழுதினா். 1,106 போ் தோ்வெழுத வரவில்லை.
கடும் சோதனைக்குப் பிறகே தோ்வா்கள் தோ்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தோ்வு கூடத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தோ்வு மையத்தை வட்டாட்சியா் நிலையில் 5 அலுவலா்கள் ஆய்வு செய்தனா். காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது