By தினமணி செய்திச் சேவை
Syndication
திருச்சியில் இருவேறு இடங்களில் போதை மாத்திரைகள் விற்றதாக சனிக்கிழமை இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பொன்மலை துா்க்கை அம்மன் கோவில் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பொன்மலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸாா் சனிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, போதை மாத்திரைகள் விற்ற அரியமங்கலம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த எம். சிவப்பிரகாஷ் (24) என்ற இளைஞரைக் கைது செய்தனா். தொடா்ந்து, அவரிடமிருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, பாலக்கரை போலீஸாா், ஹீபா் சாலை ரேஷன் கடை அருகே போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த கோரிமேடு பகுதியைச் சோ்ந்த சி. வெற்றிசெல்வம் (20) என்ற இளைஞரைக் கைது செய்து, அவரிடமிருந்து போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது