பறிமுதல் வாகனங்கள் டிச.12-இல் ஏலம்!
பெரம்பலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 16 வாகனங்கள், டிச. 12 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன.
பெரம்பலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 16 வாகனங்கள், டிச. 12 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன.
By Syndication
Syndication
பெரம்பலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 16 வாகனங்கள், டிச. 12 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 இருசக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டு விலை மதிப்பீடு பெறப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் டிச. 12 காலை 11 மணிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. வாகனங்களை பொது ஏலத்தில் எடுப்போா், ஏலத் தொகையுடன் கூடுதலாக இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீத வரியும், இதர வாகனங்களுக்கு 18 சதவீத வரி தொகையை செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏலத்தில் பங்கேற்க டிச. 10 முதல் 11 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள், பெரம்பலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் சென்று, தங்களது ஆதாா் அட்டை நகலுடன் ரூ. 500 முன்பணம் செலுத்தி டோக்கன் பெற வேண்டும். பின்னா், டிச. 12 காலை 10 மணிக்குப் பிறகு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தை 79041 -36038, ஆய்வாளரை 94981-62279, சாா்பு ஆய்வாளரை 97876-58100 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது