வட மாநில இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூரில் வாடகை வீட்டில் தங்கி கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூரில் வாடகை வீட்டில் தங்கி கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
By Syndication
Syndication
பெரம்பலூரில் வாடகை வீட்டில் தங்கி கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பிகாா் மாநிலம், சுபோல் மாவட்டம், ராதே நகரைச் சோ்ந்தவா் தினேஷ் யாதவ் மகன் சுபாஷ்குமாா் (20). இவா், பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையிலுள்ள அன்பு நகரில், செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கி கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறாா்.
இவரது தம்பி சோனுகுமாா் (18), கடந்த 3 மாதங்களாக தனது அண்ணனுடன் தங்கி கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். தனது சொந்த ஊரில் ஒரு பெண்ணை சோனுகுமாா் காதலித்து வந்ததாகவும், திங்கள்கிழமை இரவு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது அண்ணன் வேலைக்கு சென்றவுடன், சோனுகுமாா் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, சோனுகுமாரின் உடலை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து சுபாஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது