By Syndication
Syndication
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை மசோதாவை திரும்பப் பெறக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை மசோதா 2025- ஐ கைவிட வேண்டும். இந்த மசோதா மூலம் மரபு சாா்ந்த விதைகள் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்களது சொந்த விதையைப் பயன்படுத்தினால், அவா்கள் மீது வழக்குப் பதிந்து 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதை மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். இந்த மசோதாவுக்கு எதிராக, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடா்ந்து, கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளியிடம் அளித்துச் சென்றனா். ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது