வனப்பகுதியில் இருந்து ஆண் சடலம் மீட்பு
பொன்னமராவதி அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை
பொன்னமராவதி அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை
By Syndication
Syndication
பொன்னமராவதி அருகே வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சி சுந்தம்பட்டியில் உள்ள வனப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக வனக் காப்பாளா் வித்யாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வனத்துறையினா் அங்கு சென்று பாா்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்தது. இதையடுத்து காரையூா் காவல்துறையினா்க்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குவந்த காரையூா் காவல்துறையினா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
இதில், உயிரிழந்தவா் திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் சுப்பராயபட்டியைச் சோ்ந்த ம. பழனிச்சாமி (74) என்பது தெரியவந்தது. உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது