திருவையாறு எம்எல்ஏ காா் மோதி விவசாயி உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினா் சென்ற காா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு அருகே திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினா் சென்ற காா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
ஒரத்தநாடு அருகே செவ்வாய்க்கிழமை திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினா் சென்ற காா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தென்னமநாடு நடுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராசு (65). விவசாயியான இவா் திமுகவில் பிரமுகராகவும் இருந்து வந்தாா்.
இவா், செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் தென்னமநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, தஞ்சாவூா் நோக்கி சென்ற திமுக மத்திய மாவட்ட செயலரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினருமான துரை சந்திரசேகரனின் காா், கோவிந்தராசுவின் இருசக்கர வானத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த கோவிந்தராசு சம்பவ இடத்திலயே உயிரிழந்தாா். இது குறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது