இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் புதன்கிழமை இந்திய அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் புதன்கிழமை இந்திய அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு நடைபெற்றது.
By Syndication
Syndication
விழுப்புரம் / கள்ளக்குறிச்சி / செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் புதன்கிழமை இந்திய அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத் தலைமையகத்தில் முதன்மை நிதி அலுவலா் சி. அனுஜா உறுதிமொழியை வாசிக்க, அதை அலுவலா்கள், பணியாளா்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா். நிகழ்வில்துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், பணியாளா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் அரசமைப்பு தினத்தையொட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவு நிகழ்வுக்கு சட்டக் கல்லூரி முதல்வா் எஸ்.கிருஷ்ணலீலா தலைமை வகித்தாா். அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அரசமைப்புச் சட்டங்கள், அதன் முக்கியத்துவம் போன்றவை குறித்து எடுத்துரைத்தாா். சொற்பொழிவில் சட்டக் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி... : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 76-ஆவது இந்திய அரசமைப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா். இந் நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், இந்திய அரசியலைப்பு முகவுரையை தலைமை ஆசிரியா் பழனிச்சாமி வாசிக்க, அனைத்து மாணவா்களும் உடன் கூறி உறுதி ஏற்றனா். இந்திய அரசியலமைப்பின் அமைப்புமுறை, அதன் தலைவா், உருவாக்கப்பட்ட சட்ட வரைவுகள், அட்டவணைகள், உட்பிரிவுகள் குறித்து தலைமை ஆசிரியா் பேசினாா். பின்னா், சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டா் அம்பேத்காா் குறித்தும் பேசினாா். முடிவில் உதவி ஆசிரியா் ஜேசுதாஸ் நன்றி கூறினாா்.
செஞ்சி... : செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர தின வெள்ளி விழா நினைவு தூணில் பொறிக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு முகவுரை முன் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சண்முகம், உதவி காவல் ஆய்வாளா் துரைராஜ், தலைமை ஆசிரியா் ராமசாமி, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் மாணிக்கம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் இந்திய அரசமைப்பு தினத்தை கொண்டாடும் விதமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்வில் ஆசிரியா்கள் செந்தில்குமாா், ஆனந்தராஜ், பாலமுருகன், அசோக் ஆகியோா் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏழுமலை நிகழ்வை ஒருங்கிணைத்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது