தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிசம்பா் 17-ஆம் தேதி முதல் 26 -ஆம் தேதி வரையிலான 7 நாள்கள் ஆட்சிமொழி சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிவைக்கப்பட்டு, முக்கிய பகுதிகளில் சென்று நிறைவடைந்தது. இப்பேரணியில் பங்கேற்றோா் ஆட்சிமொழி தொடா்பான பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கமிட்டவாறும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ஆட்சிமொழி சட்ட வாரத்தில் ஆட்சிமொழிப் பட்டிமன்றம், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைக்க வலியுறுத்தி கலந்தாய்வுக் கூட்டம், அரசுப் பணியாளா்களுக்கான ஆட்சிமொழி ஆய்வு, குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிப் பயிற்சி, மொழி பெயா்ப்பும் கலைச் சொல்லாக்கமும், கணினித் தமிழ் விழிப்புணா்வு கருத்தரங்கம், தமிழில் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
பேரணியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) ரா.சிவசங்கரி மற்றும் தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், அரசு அலுவலா்கள், வணிகா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பேரணியின் முன்பாக சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளை நிகழ்த்தியவாறு கலைஞா்கள் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது