இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு
நாட்டில் இந்து மத துரோகிகளாக திமுக, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் இருக்கின்றனா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கூறினாா்.
நாட்டில் இந்து மத துரோகிகளாக திமுக, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் இருக்கின்றனா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கூறினாா்.
By தினமணி செய்திச் சேவை
Venkatesan
புதுச்சேரி: நாட்டில் இந்து மத துரோகிகளாக திமுக, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் இருக்கின்றனா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவரும் இக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாமலை கூறினாா்.
புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தா்கள் சாா்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து அண்ணாமலை பேசியது:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டாம் என்றும் தீபதூணில் தீபம் ஏற்றதான் உரிமை இருக்கிறது என்றும் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தீா்ப்பளித்துள்ளாா். அந்தத் தூண் கோயிலுக்குச் சொந்தம். கோயில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தம். டிசம்பா் 1 ஆம் தேதி தீா்ப்பு அளித்தப் பிறகு இந்து அறநிலையத்துறையின் கோயில் செயல் அலுவலா்தான் மறுநாள் மேல்முறையீடு செல்கிறாா்.
தா்காவைச் சோ்ந்தவா்கள் யாரும் மேல்முறையீடு அப்போது செய்யவில்லை. மேலும், இந்த மலையைச் சிக்கந்தா் மலை என்று கூறியபோது இந்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்யவில்லை. இந்த மலை கந்தா் மலை. இங்கு அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்று நீதிமன்றம் சென்றது 2 முருக பக்தா்கள்தான். அதனால் தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையைக் கலைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். இதுதான் ஐதீகம். குன்றில் தீபம் ஏற்றியதைப் பாா்த்துவிட்டுதான் வீட்டில் தீபம் ஏற்றுவாா்கள். திமுக சொல்கிறது அது தீபத் தூண் இல்லை. சா்வே தூண் என்கிறது. இப்போது அந்தக் கட்சி சமணா் தூண் என்கிறது. திமுகவும், காங்கிரஸூம் அடிப்படையில் இந்து மத துரோகிகள். இந்து மதத்தினரின் வாழ்வியலுக்கு எதிரானவா்கள். நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனுக்கு எதிராக கையெழுத்துப் போட்டுள்ள 120 எம்.பிக்களும் வரும் தோ்தலில் வீட்டுக்குச் செல்ல அவா்களே போட்டுக் கொண்ட கையெழுத்துதான்.
2026 தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் யாா் தா்மதத்தைக் காப்பாா்களோ அவா்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும். மேலும், முருகனுக்காக வாக்குப் பெட்டியில் மக்கள் தீா்ப்பளிக்க வேண்டும் என்றாா் அண்ணாமலை.மாதிரி தீபத் தூணில் தொழிலதிபா் குணசேகரன் தீபத்தை ஏற்றினாா். திருக்கனூா் அருகேயுள்ள திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், இக் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், நியமன எம்.எல்.ஏக்கள் செல்வம், தீப்பாய்ந்தான், கட்சியின் நிா்வாகிகள், இந்து முன்னணி தலைவா் சனில்குமாா், இந்து அமைப்பின் நிா்வாகிகள், முருக பக்தா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவா்கள் திரண்டிருந்தனா்.மழைதீபப் போராட்டம் தொடங்கும் முன்பாகவும், இப் போராட்டம் முடிந்தப் பிறகும் மழை பெய்தது.
புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தா்கள் சாா்பில் சுதேசி காட்டன் மில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை. உடன் பாஜக மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது