களம்காவல் அதிவேகமாக ரூ. 50 கோடி வசூல்!
மம்மூட்டியின் களம்காவல் வசூல் குறித்து...
மம்மூட்டியின் களம்காவல் வசூல் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
நடிகர் மம்மூட்டியின் களம்காவல் திரைப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஜிதின் கே.ஜோஷ் இயக்கத்தில் கடந்த டிச.5 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான திரைப்படமான களம்காவலில் வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகனாக விநாயகனும் நடித்திருந்தனர்.
பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான விநாயகனின் விசாரணையும் மம்மூட்டியின் வில்லத்தனமுமான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இருப்பினும், காட்சிகளை எடுத்த விதம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்தன. இதனால், வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படம் வெளியான 5 நாள்களில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைவான நாள்களிலேயே அதிகம் வசூலித்த மம்மூட்டியின் திரைப்படமும் இதுதான் என்கிற சாதனையையும் பெற்றுள்ளது.
மேலும், மலையாளத்தில் வெளியாகி குறைந்த நாள்களிலேயே ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 6-வது திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: அர்ஜுன் தாஸ், அன்னா பென் கூட்டணியில் புதிய படம்!
mammootty's kalamkaval movie collected 50 crores in just 4 days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது