காதலியை கரம் பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் குறித்து...
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
C Vinodh
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது நீண்ட நாள் காதலி அகிலாவை கரம் பிடித்தார்.
அபிஷன் ஜீவிந்த் - அகிலா திருமணம் உற்றார் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் இன்று(அக். 31) நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே 1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படம் பிரபலங்கள் மத்தியில் மட்டுமின்றி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படத்தில் இயக்குநர் அபிஷனும் சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நாயகனாக நடித்து வருகிறார்.
எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் படத்தில் நாயகனாக நாயகனாக அபிஷன் நடிக்கிறார்.
முன்னதாக, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அபிஷன் தனது காதலியிடம், “அக்டோபர் மாதம் என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?” என்று கேட்டிருந்தார். இது தொடர்பான விடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், அபிஷன் ஜீவிந்த் - அகிலா திருமணம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று(அக். 31) கிரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே, டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு அதன் தயாரிப்பாளர் பிஎம்டபிள்யூ காரை திருமண பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியான லோகா, காந்தாரா சாப்டர் - 1
Tourist Family director Abhishan Jeevind held hands with his longtime girlfriend Akila.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது