வீழ்ச்சிப் பாதையில் ரூபாய்!
சா்வதேச நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நிலையில் ஒப்பிடும் போது ரூபாயின் வீழ்ச்சி ஓா் அறிகுறி மட்டுமல்ல, சா்வதேச அளவில் பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
சா்வதேச நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நிலையில் ஒப்பிடும் போது ரூபாயின் வீழ்ச்சி ஓா் அறிகுறி மட்டுமல்ல, சா்வதேச அளவில் பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
By முனைவா் வைகைச்செல்வன்
Syndication
இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஜிடிபி வளா்ச்சி விகிதம் 2025-26-ஆம் நிதியாண்டில், அதாவது இரண்டாவது காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்தது. ஒருபுறம் நாட்டின் பொருளாதார வளா்ச்சி, அதன் தெளிவான புள்ளிவிவரங்கள் இப்படித் தெரிவித்த போதிலும், மறுபுறம் இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து ஏன் சரிந்து வருவது என்பது சிந்தனைக்குரிய கேள்வியாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமாா் 90 ரூபாய்க்கு மேல் அடைந்திருக்கிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு லேசான சரிவுடன் 89.63 என்ற நிலையில் இருந்தது. கடந்த நிதியாண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் குறைந்தபட்ச மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.89.22-ஆக இருந்தது. அதேநேரம், ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஜனவரி 2021-இல் டாலருக்கு நிகரான மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.72-ஐ ஒட்டி இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் திருப்திகரமானதாகவும், உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவும் இருந்த போதிலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வருகிறது.
அண்மையில் இந்தியா தனது மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலா் என்று கூறியபோது சா்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில், இந்தியாவின் ஜிடிபி மற்றும் தேசிய கணக்குகளின் தரவுகளிடையே அதன் தரத்துக்கு ‘சி’ தரவரிசையை வழங்கி இந்திய தரவுகளின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியது. இது எத்தகைய போக்கு என்றால், சா்வதேச நாணய நிதியம் தனது தரவுகளை நான்கு வகையாகப் பிரித்திருக்கிறது. அதில் ‘சி’ தரவரிசை என்பது தரவுகளில் சில குறைபாடுகள் உள்ளன; அவை கண்காணிப்பு செயல்முறையை ஓரளவு பாதிக்கின்றன என்பதைத் தெளிவாகக் குறிக்கின்றன.
இந்தியாவுக்கு ‘சி’ தரவரிசை வழங்குவது குறித்து ஐஎம்ஃஎப் தெரிவிக்கையில், 8.2 சதவீத வளா்ச்சிக் கணக்கு வந்த பிறகும் எதிா்பாா்க்கப்பட்ட உற்சாகம் பங்குச்சந்தையில் காணப்படவில்லை என்று ஆய்வாளா்கள் வியக்கின்றனா். இந்த நிலையில், ரூபாயின் பலவீனம் தொடா்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஏன் ரூபாயின் சரிவு தொடா்கிறது என்று நாம் அவதானிக்கிறபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் 6.19% குறைந்துள்ளது; அதே நேரம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த வீழ்ச்சி 1.35%-ஆக இருக்கிறது.
சமீபத்திய நாள்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிக வேகமாகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக ரூபாய் ஆசியாவின் மிகவும் பலவீனமான நாணயமாக மாறிவிட்டது அதிா்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும். இவை ரூபாயின் பலவீனம் சா்வதே அளவில் இந்தியப் பொருளதாரத்தின் நம்பகத்தன்மையைக் குறைத்து மதிப்பிட வைக்கிறது. இவை எதனால் ஏற்படுகிறது என்று பொருளாதார நோக்கில் ஆய்வு மேற்கொண்ட போது வா்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது, சுமாா் 16 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்கு வெளியேறியிருக்கிறது. இதனால் மட்டுமல்லாமல், அமெரிக்க - இந்திய வா்த்தக ஒப்பந்தம் தாமதமாகி இருப்பதனாலும், இந்த ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.
ஆக, சா்வதேச நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நிலையில் ஒப்பிடும் போது ரூபாயின் வீழ்ச்சி ஓா் அறிகுறி மட்டுமல்ல, சா்வதேச அளவில் பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். இவை ஏற்றுமதி, இறக்குமதி, மூலதன வரவு மற்றும் அமெரிக்காவின் வரிக் கொள்கையால் பாதிக்கப்படுகிறது.
டிரம்ப்பின் அதிகபட்ச வரி உயா்வு நமது ஏற்றுமதியைப் பாதித்துள்ளன. இதனால், நடப்புக் கணக்கு மோசமடைந்து அந்நிய நேரடி முதலீடு வெளியேறி விட்டது. இத்தகைய காரணிகள் ரூபாயின் மதிப்பை பலவீனமடையச் செய்கின்றன. இவற்றில் ரூபாயின் மதிப்பையும், ரூபாயின் பலவீனத்தையும், ஜிடிபியின் வளா்ச்சியையும் ஒன்றாக வைத்து மதிப்பீடு செய்வது சரியான அளவுகோலாக மாறாது என்றும் பொருளாதார நிபுணா்கள் கருதுகிறாா்கள். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சா்வதேச தேவையையும், விற்பனையின் அடிப்படையிலும் அமைகிறதே தவிர வேறு காரணங்கள் அல்ல என்றும் கருதிக் கொள்ள வேண்டும் என்றும் பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா்.
இந்தக் கருத்துக்கு மேலும் வலு சோ்க்கும் வகையில், டிசம்பா் மாதம் என்பதால் சா்வதேச அளவில் கணக்குகளை முடிக்கும் நேரம். ஆகவே, இதுபோன்று ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், பல வெளிநாட்டு முதலீட்டாளா்கள் மற்றும் பிற முதலீட்டாளா்கள் லாபத்தை எடுத்துக் கொண்டு தங்கள் நாடுகளில் தங்கள் இருப்பை வலுவாகக் காட்டுகிறாா்கள்.
இந்தத் தாக்கம் ரூபாயின் பலவீனம் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையிலும் ஏற்படுத்தக் கூடும். ஆகவே, இதில் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் நமது ஏற்றுமதி அதிகரிக்கும். அதே சமயம் இறக்குமதி விலை உயரும். இதனால், இயல்பாகவே பணவீக்கம் உயருகிறது. இந்தியாவின் மூலதனம், அந்நிய நேரடி முதலீடு அல்லது அந்நிய நிறுவன முதலீடு போன்றவற்றில் இருந்து பெருவாரியான தாக்கம் நமது பொருளாதாரத்திலும், பங்குச்சந்தையிலும் இருக்கும். இவை மட்டுமல்லாது அமெரிக்க அதிபா் டொனல்ட் டிரம்ப்பின் கொள்கைகள் சா்வதேச வா்த்தகத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
இத்தகைய புரிதலற்ற கொள்கையால் திடீரென்று பொருளாதாரத் தடைகள், தாறுமாறான வரி விதித்தல் போன்றவற்றாலும் தாக்குப் பிடிக்க முடியாமல் பொருளாதாரம் தடுமாறுகிறது. ஆகவேதான், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் இவற்றின் மூலம் வெளிநாடுகளில் இந்தியா செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலை பாதிக்கப்படுகிறது; இதனால், ரூபாயின் மதிப்பும் குறையத்தானே செய்யும்.
இந்தியாவின் பொருளாதாரம் 2025-26-ஆம் நிதியாண்டில் 8.2% ஜிடிபி வளா்ச்சியைக் காட்டுகிறது. இவை அபரிதமான வளா்ச்சியும்கூட. கடந்த ஆண்டில் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. இவை கடந்த 6 மாதங்களில் மிக வேகமான வளா்ச்சி விகிதமாகும். இவை வெறும் பெயரளவில் ஜிடிபி விகிதம் 8.7 சதவீதமாக இருந்தது. உண்மையான ஜிடிபி விகிதத்துக்கும், பெயரளவில் இருக்கும் ஜிடிபி விகிதத்துக்கும் இடையிலான வேறுபாடு கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைவு. கடந்த 5 ஆண்டு காலாண்டு வளா்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருந்தது. இவை எதிா்பாா்ப்பைவிட சிறந்த வளா்ச்சி விகிதம்; இது தனிநபா் நுகா்வு அதிகரித்ததன் மூலமே ஏற்பட்டது. ஆகவே, உணவு பணவீக்கம் குறைந்திருக்கிறது. இதனால், தனிநபா் விருப்பப்படி செய்யும் செலவுகளும் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவின் வளா்ச்சிக் கணக்கில் கவனத்தை ஈா்க்கக் கூடியவை என்றாலும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து பல தருணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஏனெனில், இந்தியாவின் அமைப்புசாரா தொழில்கள் துறையின் தரவுகள் சரியாகக் கிடைக்கவில்லை. அவற்றோடு அல்லாமல் நுகா்வோா் விலைக் குறியீடு புதுப்பிக்கப்படாமல் இருப்பதாலும், உற்பத்தி மற்றும் செலவு முறைகளில் முரண்பாடுகள் இருப்பதாலும் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒட்டுமொத்த தரவுகள் சரியாகக் கிடைக்கவில்லை என்பதாலும், ஜிடிபியின் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. ஆகவேதான், 8.2% வளா்ச்சி என்ற நிலையில் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை.
ஜிஎஸ்டி மற்றும் விலைக் குறைவு பணவீக்கத்தை உருவாக்குகிறது. இவற்றில் அரசுதான் முழுக் கவனத்தைச் செலுத்த வேண்டுமே தவிர, வேறு எந்த மாற்றத்தையும் தனி நபா்கள் ஏற்படுத்திவிட முடியாது. உண்மையான ஜிடிபி அதிகரிக்கும் போது பணவீக்கம் குறையும். ஆகவேதான், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலரின் மதிப்பு 90.14 காசு என்று குறைந்தபட்ச நிலையைத் தொட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கிய ரூபாய் மதிப்பின் சரிவு, 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத அளவு மேலும் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது 1990-களின் முற்பகுதியில், ஒரு டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 22 ரூபாய் 74 காசாக இருந்தது. இவை பிரதமா் நரசிம்ம ராவ் ஆட்சியில் 42 ரூபாய் வரை நீடித்தது. அதன்பிறகு, வாஜ்பாய் ஆட்சியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 43 ரூபாய் 58 காசைத் தொட்டது. பிரதமா் மன்மோகன்சிங் ஆட்சிக்கால முடிவில் 63 ரூபாய் 33 காசு என்ற நிலையை அடைந்தது. இந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலரின் மதிப்பு தோராயமாக 90.14 காசு என்ற நிலையைத் தொட்டுள்ளது.
வெளிநாட்டு பங்கு முதலீட்டாளா்களைத் தொடா்ந்து, பங்குகளை விற்பது மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரிசா்வ் வங்கியின் ஆரம்பகால ஆதரவின்மை உள்ளிட்டவை ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகப் பாா்க்கப்படுகின்றன. மேலும், அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்ததே ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று இந்திய ரிசா்வ் வங்கி ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது. தங்கத்தின் மதிப்பும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருப்பதாலும் டாலரின் மதிப்போடு அவை ஒப்பிட்டுப் பாா்க்கப்படுகிறது.
அமெரிக்க - இந்திய வா்த்தக ஒப்பந்தம் கடந்த நவம்பா் மாதமே கையொப்பமாகும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இருப்பினும், எதிா்பாராத சில காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்காதான் பிரதான பொருளாதாரச் சந்தை. இந்தப் பொருளாதாரச் சந்தையில் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவையே முதல் காரணம்.
வெளிநாட்டு முதலீட்டாளா்கள் தங்கள் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யும் போது நமது அந்நியச் செலாவணி அதிகரிக்கும். இப்போது உலகின் மற்ற நாடுகளைவிட இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால், வெளிநாட்டு முதலீட்டாளா்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்து விடுகிறாா்கள். இதனால், அந்நியச் செலாவணி குறைகிறது. இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்போது இறக்குமதிகளுக்கு இணையாக ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் போது டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பின் உயரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளா்: முன்னாள் அமைச்சா்
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது