இந்து அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...
சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிச.28-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி பொறியாளர்(சிவில்) -1
சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை உதவியாளர் - 2
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: சீட்டு விற்பனையாளர் - 3
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுலை மற்றும் ஆங்கிலத்தில் இளனிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தமிழ் புலவர் - 1
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: தமிழில் பி.லிட் அல்லது பி.ஏ அல்லது எம்.ஏ அல்லது எம்.லிட் முடித்திருக்க வேண்டும். திருமுறைகள் ஒப்பிவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி மின்பணியாளர் - 2
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் மின், மின் கம்பிப் பணியாளர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து "எச்"சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பாரா - 6
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: குருக்கள் அர்ச்சகர்(நிலை 2) உபகோயில் - 1
சம்பளம்ச மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடையில் துறையில் ஓராண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: காவலர் - 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: உதவி பரிச்சாரகர் - 2
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31.500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கோயில்களின் வழங்கங்களுக்கேற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திவராகவும் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in அல்லது https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் உரிய சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் உறையின் மீது பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600 004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 28.12.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Mylapore Kapaleeswarar Temple Recruitment 2025 for 19 Junior Assistant Posts
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் காலிப்பணியிடங்கள்: 22-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது