ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கிரேடு ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...
வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கிரேடு ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை, வளாகத்துறை, மேற்பார்வைத்துறை ஆகியவற்றில் காலியாக உள்ள கிரேடு ‘சி’ பணியிடங்களான 77 காலிப்பணியிடங்களைஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 2026 ஜனவரி 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 77
துறைவாரியான காலியிடங்கள் விவரம்.
Department of Information Technology (DIT)
பணி: Data Scientist - 2
பணி: Data Engineer - 2
பணி: IT Security Expert - 7
பணி: IT System Administrator - 5 பணி: IT Project Administrator - 3
பணி: AI / ML Specialist - 3
பணி: IT - Cyber Security Analyst - 5
பணி: Network Administrator - 3
Premises Department
பணி: Project Manager - 5
Department of Supervision (DoS)
பணி: Market & Liquidity Risk Specialist - 1
பணி: IT - Cyber Security Analyst - 13
பணி: Operational Risk Analyst - 2
பணி: Analyst (Credit Risk) - 2
பணி: Analyst (Market Risk) - 2
பணி: Risk Analyst - 5
பணி: Accounts Specialist - 5
பணி: Risk Assessment & Data Analyst- 2
பணி: Policy Research Analyst - 2
பணி: Business & Financial Risk Analyst - 6
பணி: Data Engineer-I - 1
பணி: Data Engineer-II - 1
பணி: Data Analyst (Micro Data Analytics) - 1
பணி: Banking Domain Specialist - 1
பணி: Data Scientist (Data modelling) -2
பணி: Bank Examiner (Liquidity Risk) -1
பணி: Senior Bank Examiner (Liquidity Risk)- 1
பணி: Data Scientist (Advanced Analytics) - 4
பணி: Credit Risk Specialist -4
பணி: Programme Coordinator (CoS) - 2
சம்பளம்: தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.3,10,000 முதல் ரூ.4,10,000 வரை வழங்கப்படும். டேட்டா சயின்டிஸ்ட் (Advanced Analytics)பதவிக்கு மாதம் ரூ. 4,30,000 - 5,10,000 வரையும், திட்ட ஒருங்கிணைப்பாளர் (CoS) பதவிக்கு மாதம் ரூ.4,80,000 - 6,00,000 வரை வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், முதுகலை பொறியியல், எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தெளிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பெரும்பாலான பணிகளுக்கு 30 முதல் 40 வயதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் அரசு விதிமுறைகளுக்கு தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ரிசர்வ் வங்கி அமைக்கும் குழுவின் மூலம் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.1.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
The Reserve Bank of India Services Board, hereinafter referred to as the ‘Board’, invites “online applications” from eligible candidates for Lateral Recruitment of Experts on Full-Time Contract Basis for the below posts in Reserve Bank of India
ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது