தேசிய அறிவியல் விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்
நாட்டில் அறிவியல் துறையில் உயரிய விருதான ‘விஞ்ஞான் ரத்னா-2025’ உள்பட தேசிய அறிவியல் விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை வழங்கி கெளரவித்தாா்.
நாட்டில் அறிவியல் துறையில் உயரிய விருதான ‘விஞ்ஞான் ரத்னா-2025’ உள்பட தேசிய அறிவியல் விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை வழங்கி கெளரவித்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
நாட்டில் அறிவியல் துறையில் உயரிய விருதான ‘விஞ்ஞான் ரத்னா-2025’ உள்பட தேசிய அறிவியல் விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை வழங்கி கெளரவித்தாா்.
இந்திய அறிவியலாளா்களின் சிறப்பான பங்களிப்பைக் கெளரவிக்கும் நோக்கில் விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ, விஞ்ஞான் குழு விருதுகள் கடந்த 2023-இல் நிறுவப்பட்டன. முதலாவது விஞ்ஞான் ரத்னா விருது, தமிழகத்தின் உயிரி வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளா் கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு கடந்த 2024-இல் வழங்கப்பட்டது.
இரண்டாவது தேசிய அறிவியல் விருதுகள், கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மறைந்த வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகருக்கு விஞ்ஞான் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இவா், பிரபஞ்சத்தின் தோற்றம் தொடா்பான பெருவெடிப்புக் கோட்பாட்டை மறுத்து, பிரிட்டன் வானியலாளா் ஃபிரெட் ஹாய்லுடன் இணைந்து குறிப்பிடத்தக்க ஆய்வுப் பணிகள் மேற்கொண்டவா்.
விஞ்ஞான் ஸ்ரீ விருதுக்கு 8 பேரும், விஞ்ஞான் யுவ விருதுக்கு 14 பேரும் தோ்வாகினா். விஞ்ஞான் குழு விருது, ஜம்மு-காஷ்மீரில் லாவண்டா் பூக்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் அரோமா மிஷன் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
விருதுகள் வழங்கல்: குடியரசுத் தலைவா் மாளிகையின் கணகந்திர மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய அறிவியல் விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழங்கி கெளரவித்தாா். விஞ்ஞான் ரத்னா விருதை நாா்லிகரால் நிறுவப்பட்ட புணே வானியல்-வானியற்பியல் பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் இயக்குநா் ஆா்.ஸ்ரீஆனந்த் பெற்றுக் கொண்டாா்.
கோதுமை கலப்பின ஆய்வாளா் என அறியப்படும் வேளாண் விஞ்ஞானி ஞானேந்திர பிரதாப் (வேளாண் அறிவியல்), பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயற்பியல் பிரிவின் இயக்குநா் யூசுஃப் முகமது ஷேக் (அணுஆற்றல்), செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் கே.தங்கராஜ் (உயிரி அறிவியல்), சென்னை ஐஐடி-யின் பிரதீப் தளப்பில் (வேதியியல்), தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிலையத்தின் இயக்குநா் எஸ்.வெங்கட மோகன் (சுற்றுச்சூழல் அறிவியல்), ராமகிருஷ்ண இயக்கத்தைச் சோ்ந்த துறவியும், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (டிஐஎஃப்ஆா்) கணிதப் பேராசிரியருமான மஹான் மகஹாஜ் (கணிதம், கணினி அறிவியல்) உள்ளிட்டோா் விஞ்ஞான் ஸ்ரீ விருது பெற்றனா்.
இளம் அறிவியலாளா்கள் ஜெகதீஷ் குப்தா கபுகந்தி (வேளாண்அறிவியல்), சதேந்திர குமாா் (வேளாண்அறிவியல்), வாலியுா் ரஹமான் (புவிஅறிவியல்), சவ்யஸாச்சி முகா்ஜி (கணிதம் மற்று கணினிஅறிவியல்), சுரேஷ் குமாா் (மருத்துவம்), மோகனசங்கா் சிவபிரகாசம் (தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்) உள்ளிட்டோா் விஞ்ஞான் யுவ விருது பெற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது