அன்மோல் பிஷ்னோய்க்கு டிச., 5 வரை காவல் நீட்டிப்பு!
தாதா அன்மோல் பிஷ்னோய்க்கு டிச. 5ஆம் தேதி வரை என்.ஐ.ஏ. காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாதா அன்மோல் பிஷ்னோய்க்கு டிச. 5ஆம் தேதி வரை என்.ஐ.ஏ. காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Manivannan.S
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் பாபா சித்திக் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தாதா அன்மோல் பிஷ்னோய்க்கு டிச., 5ஆம் தேதி வரை என்.ஐ.ஏ. காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட அன்மோல் பிஷ்னோய்க்கு இன்றுடன் என்ஐஏ காவல் முடிந்த நிலையில், மேலும் 7 நாள்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவல் முடிந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அன்மோல் பிஷ்னோயை நீதிமன்றத்தில் இன்று (நவ. 29) ஆஜர்படுத்தினர். அப்போது சிறப்பு நீதிபதி பிரஷாந்த் சர்மா மேலும் 7 நாள்களுக்கு காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
பாபா சித்திக் கொலை மட்டுமன்றி பாலிவுட் நடிகா் சல்மான் கான் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு, பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தாா்.
தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரரான இவா், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டாா். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தி அழைத்துவரப்பட்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இந்த கும்பலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அன்மோல் பிஷ்னோயிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | டிசம்பர் 15-ல் தெலங்கானாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு
Delhi court extends gangster Anmol Bishnoi's NIA custody till December 5
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது