உத்தரப் பிரதேசம்: ஓநாய் தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி
உத்தரப் பிரதேசத்தியல் ஓநாய் தாக்கியதில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தியல் ஓநாய் தாக்கியதில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Sasikumar
உத்தரப் பிரதேசத்தியல் ஓநாய் தாக்கியதில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்சில் வசிப்பவர் ரோஷன் குமாரின் மகன் ஸ்டார். இச்சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 2 ஓநாய்கள் சிறுவனை தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் பலியானான் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், ஓநாய்களில் ஒன்று சிறுவனைப் பிடித்து இழுத்துச் சென்றது. அக்கம்பக்கத்தினர் எச்சரிக்கை எழுப்பி குச்சிகள் மற்றும் கம்பிகளால் விலங்குகளைத் துரத்தினர். பிறகு வயலில் பலத்த காயமுற்று மயக்கமடைந்த நிலையில் கிடந்த சிறுவனை அவர்கள் கண்டனர். சிறுவன் முதலில் கைசர்கஞ்சில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.
அவனது நிலை மோசமடைந்ததால், லக்னௌவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டான். ஆனால் வழியில் இறந்தான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் வகையில், வன அதிகாரி ராம் சிங் யாதவ், வெள்ளிக்கிழமை மாலை ககாரா நதிக்கு அருகில் அமைந்துள்ள மல்லஹான் புர்வா கிராமத்தின் கரும்பு வயல்களுக்கு அருகில் சிறுவன் தாக்கப்பட்டான்.
சென்னை மெட்ரோ: பணியை வெற்றிகரமாக முடித்த முல்லை, பயணத்தை தொடங்கிய குறிஞ்சி!
குழந்தை கிடந்த இடத்தில் ஓநாய் ஒன்றின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சிறப்பு குழுக்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்திற்கு அருகில் மூன்று கூண்டு பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 9 முதல் கைசர்கஞ்ச் மற்றும் மஹ்சி வட்டங்களில் ஓநாய் தாக்குதல்களில் 7 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
A five-year-old boy has died in Kaisarganj – a tehsil in Uttar Pradesh's Bahraich district that has witnessed a spate of wolf attacks of late – from injuries sustained in an attack by the animal, officials said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது