கர்நாடக முதல்வர் பதவி யாருக்கு? சித்தராமையா வீட்டில் சிவக்குமார் ஆலோசனை
கர்நாடக முதல்வர் பதவி யாருக்கு என்பது குறித்து சித்தராமையா வீட்டில் சிவக்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
கர்நாடக முதல்வர் பதவி யாருக்கு என்பது குறித்து சித்தராமையா வீட்டில் சிவக்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vanisri
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவி யாருக்கு என்று எழுந்த சர்ச்சை குறித்து ஆலோசனை நடத்த, முதல்வர் சித்தராமையா இல்லத்துக்கு இன்று காலை துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வருகை தந்துள்ளார்.
முதல்வர் பதவி தொடர்பான சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சனிக்கிழமை காலை, முதல்வர் சித்தராமையாவின் இல்லமான 'காவேரி'க்கு வருகை தந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைமைப் பிரச்சினையில் ஏற்பட்ட இழுபறியை நீக்கும் நோக்கில் சித்தராமையா இல்லத்துக்கு, சிவக்குமார் காலை உணவு விருந்தில் பங்கேற்கிறார் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடக முதல்வராக, ஐந்து ஆண்டுகள் முழுமையாக தான் நீடிக்க மக்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக என்று சித்தராமையா கூறி வரும் நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சுழற்சி முறையில் முதல்வராக நியமிக்கப்படுவேன் என்று தனக்கு கட்சித் தலைமைசார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக சிவகுமார் கூறி வருகிறார்.
கர்நாடக முதல்வர் பதவிக்கான மோதல் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டாலும், கர்நாடக காங்கிரஸ் அரசு இரண்டரை ஆண்டுகள் நிறைவு செய்ததும், சர்ச்சை தீவிரமடைந்தது.
இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை காங்கிரஸ் உயர்நிலைக் குழு தலையிட்டு, இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பேசி பிரச்னைக்குத் தீர்வுகாணுமாறு கேட்டுக் கொண்டது.
அதன்படி, சித்தராமையா வெள்ளிக்கிழமை துணை முதல்வர் சிவக்குமாரை காலை உணவு விருந்துக்கு தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அதனை ஏற்று, இன்று காலை முதல்வர் சித்தராமையா வீட்டுக்கு சிவக்குமார் வருகை தந்தார். முன்னதாக, அங்கிருந்த செய்தியாளர்கள், அவரிடம் கேள்விகள் எழுப்பியதற்கு, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதோடு, வெளியே வரும்போது பேசுவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
காலை உணவின் மெனு என்ன?
சித்தராமையா வீட்டில் வழங்கப்படும் காலை விருந்துக்கான மெனுவில் இட்லி, வடை, சாம்பார், சட்னி மற்றும் உப்புமா இடம்பெற்றிருக்கும் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Karnataka Deputy Chief Minister D K Shivakumar on Saturday reached Chief Minister Siddaramaiah's residence 'Kaveri' for a breakfast meeting intended to break the logjam over the leadership issue.
இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் நாசர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது