புலிக்குட்டிகளுடன் கிராமத்தில் உலவிய பெண் புலியை யானைகள் உதவியுடன் பிடித்த வனத்துறை!
4 குட்டிகளுடன் காட்டிலிருந்து வெளியேறி கிராமத்தில் உலவிய புலி வனத்துறையால் பிடிப்பு
4 குட்டிகளுடன் காட்டிலிருந்து வெளியேறி கிராமத்தில் உலவிய புலி வனத்துறையால் பிடிப்பு
By இணையதளச் செய்திப் பிரிவு
Sundar S A
மைசூரு: கர்நாடகத்தில் கிராமத்தில் புலிக்குட்டிகளுடன் உலவிய பெண் புலியை யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
ஹன்சூர் வட்டத்திற்குள்பட்ட கௌடனகடே கிராமத்தில் பெண் புலி ஒன்று அதன் குட்டிகளுடன் சுற்றித்திரிவதாக கிராம மக்கள் புகார் அளித்ததனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனை அடித்துக் கொன்ற புலியே இப்போது மீண்டும் அப்பகுதியில் உலவுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதன்பேரில், வனத்துறையினர் அந்தப் புலியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
புலியைப் பிடிக்க 4 யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், விளைநிலத்தில் இருந்த புலியை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்பின், அந்தப் புலிக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது.
இதனிடையே, அதன் 4 புலிக்குட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) காலையில் மற்றொரு பகுதியிலிருந்து பிடிபட்டன. அந்தக் குட்டிகளும் தாயுடன் சேர்க்கப்பட்டு பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடப்பட்டிருப்பதக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tigress, four cubs captured on village outskirts in Karnataka's Hunsur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது