உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்
அவதார் படவரிசையில் உருவாகியிருக்கும் 3ஆவது மற்றும் கடைசி படமான Fire and Ash திரைவிமர்சனம்
அவதார் படவரிசையில் உருவாகியிருக்கும் 3ஆவது மற்றும் கடைசி படமான Fire and Ash திரைவிமர்சனம்
By Dharmarajaguru.K
Dharmarajaguru.K
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் உலகலாவிய வரவேற்பைப் பெற்ற அவதார் படவரிசையின் மூன்றாவது படமான Fire and Ash இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடைசி அவதார் படமாக வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த முடிவைக் கொடுத்துள்ளதா?
2009ல் வெளியான முதல் அவதார் திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தாலும் பிரமிக்கவைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளாலும் பலரையும் கவர்ந்தது. அந்த படத்தை பிடிக்காத யாரும் இல்லை என்ற காலம் அது. ஆனால் 12 வருடங்களுக்குப் பின்னர் வெளியான இரண்டாம் பாகம் The Way Of Water எதிர்பார்ப்பை எகிரவைத்தாலும் வசூலைக் குவித்தாலும் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பெறவில்லை என்பதே உண்மை!
ஆனாலும் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கென தனி ரசிகர்கள் இருந்தார்கள். இந்த நிலையில் கடைசி அவதார் படமான இந்த Fire and Ash முந்தைய படத்தை விட அதிக அளவில் வரவேற்பைப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றே சொல்லலாம்!
அவதார் கதைகளம் பலருக்கும் தெரியும். தெரியாதவர்களுக்கான கதைச் சுருக்கம் என்னவென்றால், 2100களில் நடக்கும் இந்தக் கதையில், உயிர்கள் வாழத்தகுந்த மற்றொரு கிரகத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அவை வித்தியாசமான உயிரினங்கள். அந்த கிரகத்தில் மனிதர்களால் வாழ முடியாது என்பது தெரிகிறது. ஆனால் அங்குள்ள ஒரு தனிமத்தை அபகரிக்க நினைக்கிறது ஒரு தனியார் நிறுவனம் (RDA).
அதற்கு தடையாக இருக்கும் பழங்குடியின மக்களான நா-வீ குழுவை இடம்பெயரச் செய்ய, நமது ஹீரோவை “அவதார்” முறை மூலம் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட அந்த கிரக நா-வீ குழுவினரைப் போன்ற உடலுக்குள் அனுப்புகிறார்கள். அந்தப் புதிய உடலுடன் நா-வீ மக்களிடம் பழகி அவர்களை இடம்பெயர வைப்பதுதான் ஹூரோவின் வேலை! ஆனால் அங்கிருக்கும் ராணுவத் தளபதி மைல்ஸ்-க்கு பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை. நடுவில் வருபவர்களை நாலாக வெட்டிப்போட்டு வேலையை முடிக்கும் ஆர்வத்தில் அவர் இருக்கிறார். அந்த மக்களோடு பழகி அவர்களின் அன்பைப் பெற்றும் அவர்களை அன்பு செய்யவும் ஆரம்பிக்கும் ஹீரோ ஜேக் சல்லிக்கும், இந்த தளபதி மைல்ஸ் குவாரிட்ச்சுக்கும் அப்போது துவங்கும் பகை, 3 படங்களாக நகர்ந்துவருகிறது.
பேசிமுடிக்க அனுப்பப்பட்ட ஹீரோ அவர்களோடே செட்டில் ஆகிவிட, கடுப்பாகும் தளபதி அவனைக் கொல்லத் துரத்திக்கொண்டே இருக்கிறார். அப்படியாக இந்த பாகத்தில் அவனைக் கொல்லத்துரத்துகிறார், துரத்துகிறார், துரத்துகிறார்! முடித்தாரா? இது Spoiler இல்லாத திரை விமர்சனம். ஆனால் உங்களுக்கு இந்தக் கேள்விக்கு விடை ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
தற்போது தனது சொந்த குழுமம் ஒமாட்டிகாயாவிலிருந்து பிரிந்து கடல்சார் கிராமமான அக்குவாடிக் மெட்கயினாவில் மறைந்திருக்கிறது ஹீரோவின் குடும்பம். அவரைத் தேடி தீரா பகையுடன் தீத்துக்கட்ட துடிக்கும் தளபதி பல அவதாரங்கள் எடுத்துத் துரத்துவதுதான் இந்தப் படமும். கதைக்களமாகச் சொல்ல வேறு எதுவும் இல்லை.
படத்தில் வேலைபாடு, இயக்குநராக ஜேம்ஸ் கேம்ரூனின் பணி எல்லாமே திரையில் பார்க்கும்போது பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு இடமும், புதுப்புது உயிரினங்களும், ஆக்சன் காட்சிகளும் எங்குமே பார்வையாளர்களைக் கவரத் தவறுவதில்லை. உண்மையில் இதுபோன்ற படங்களை IMAX -ல் காண்பது என்பதே ஒரு தனி அனுபவம்தான். அதை அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும்!
ஆனால் படத்தில் பிரச்னையாக இருப்பது, இரண்டாம் பாகத்தில் தொற்றிக்கொண்டே அதே பிரச்னைதான். கதை!
முதல்பாகத்தில் கிராபிக்ஸ் காட்சிகளோடு நின்றுவிடாமல் கதையும் ஒரு வேகத்தில் நகர்ந்தது. அதுவே படத்திற்கு பலமாக அமைந்தது. இரண்டாம் பாகம் கொஞ்சம் அதிக நேரமாகத் தெரிந்தாலும் அதிலும் கொஞ்சம் கதை குறைவாகவே தெரிந்தது. மூன்றாம் பாகம், அதற்கு அடுத்த இடத்திலேயே நிற்கிறது.
கதை மிகக்குறைவு, ஓடுவது, பிடிபடுவது, தப்பிப்பது, ஓடுவது, பிடிபடுவது, தப்பிப்பது என்றே கதை நகர்வது அயர்ச்சியைத்தான் கொடுக்கிறது. நல்ல கிளைத் தளங்கள் படத்திற்கு இருந்தாலும், இந்த ஓடிப்பிடித்து ஆட்டத்திலேயே கதை நகர்வதுதான் படத்தை அதன் முழு Potential-ல் இருந்து விலக்கி வைக்கிறது. படத்தின் நீளமும் அதிகம் என்பதால் IMAX டிக்கெட்டுக்கு பாக்கெட்டில் பணத்தோடு, மனதில் கொஞ்சம் பொறுமையும் தேவையாகப் படுகிறது.
புதிதாக அறிமுகமாகும் வில்லி நல்ல முயற்சி! இந்த ஓடிப்பிடித்து ஆட்டத்தில் அவரின் பங்கு கொஞ்சம் புதுமையை கொடுக்க முயன்றிருக்கிறது. அவர்தான் அந்த Fire and Ash என்றாலும் அவரின் பங்கு படத்திற்கே குறைவுதானோ எனத் தோன்றுகிறது.
குடும்பத்தின் வளர்ப்பு மகள் கிர்ரி-க்கு இருக்கும் சக்தி படத்தின் முடிவில்தான் வெளியே வரும் என்றாலும், அந்த சக்தி பெரிய விஷயமாகத் தெரியவில்லை. கடவுளின் பாதி முகத்தைக் காட்டும்போது “இருக்குடா இன்னக்கி” என ஏறும் Hype, கடவுள் செய்த உதவியைப் பார்க்கும்போது காணாமல் போய்விடுகிறது.
மொத்தமாகப் பார்க்கையில் ஒரு மனிதனுக்கு குடும்பமும், குடும்பைத் தாண்டி இருக்கும் தன்னைச் சார்ந்த மனிதர்களும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் கதை மூலம் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும் உலகத்தரத்தில் இருந்தாலும் கதையில் கொஞ்சம் கவனம் குறைந்ததால், குழந்தைகள் மற்றும் சில கிராபிக்ஸ் விரும்பிகளைத் தவிர, Cinephilesக்கு இந்தப் படம் விருப்பமான படமாகுமா என்பது சந்தேகம்தான்!
இருந்தாலும் இந்தத் திரை அனுபவம் அனைவரும் கண்டிப்பாக பெற வேண்டிய ஒன்று என்பதால், அவசியம் திரையில் கண்டுகளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது