சிவகங்கை கோர விபத்து: குடியரசு துணைத் தலைவா், தலைவா்கள் இரங்கல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தொடர்பாக...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தொடர்பாக...
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் இரங்கல்
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிவகங்கையில் நிகழ்ந்த கோர விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோா் விரைந்து குணமடைய இறைவனை பிராா்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 போ் உயிரிழந்துள்ளனா் என்ற துயரச் செய்தி அறிந்ததும் மிகுந்த அதிா்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனை தொடா்பு கொண்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உரிய உயா்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவா்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என கூறியுள்ளார்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்)
பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில், சாலை பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பேருந்து ஓட்டுநா்கள் மட்டுமன்றி, அனைவரும் தவறாமல் பின்பற்றி, பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக)
சிவகங்கை மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தொடா் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணா்வு அரசு ஏற்படுத்த வேண்டும்.
விஜய்(தவெக)
பேருந்து விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோன்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், ஐஜேக தலைவா் ரவிபச்சமுத்து, காா்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
Sivaganga bus accident: Vice President, leaders express condolences
திருப்பத்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த பயணிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது