மக்கள் மாளிகை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆளுநர் மாளிகை!
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 'மக்கள் மாளிகை' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 'மக்கள் மாளிகை' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
By தினமணி செய்திச் சேவை
C Vinodh
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காலனித்துவப் பெயரிடலில் இருந்து விலகிச் சென்று, மக்களை மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் "மக்கள் மாளிகை" என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டபடி, "ராஜ்பவன், தமிழ்நாடு" என்பது "மக்கள் மாளிகை தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை "மக்கள் மாளிகை" ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது.
மேலும், இது மக்களை மையப்படுத்தப்பட்ட நல்லாட்சி மற்றும் அதன் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகாலமாக உள்ள உறுதிப்பாட்டினை முன்னெடுத்துச் செல்கிறது.
இது, இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
மேலும், இந்த அலுவலகம் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதிசெய்கிறது. இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிவிட்டர், முகநூல் பக்கங்களில் லோக் பவன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட்!
The Governor's House Office has officially announced that the name of the Tamil Nadu Governor's House has been changed to 'People's House Tamil Nadu'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது