வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு!
வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Muthuraja Ramanathan
வாக்காளர் பெயர் சேர்ப்பு : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு சிறப்பு முகாமுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், பெயர்கள் விட்டுப் போனவர்கள், நீக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் வார இறுதியான வருகிற டிச.27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்திற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இந்தச் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, அதில் மாநிலம் முழுவதும் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில், 1.56 லட்சம் பேர் மட்டும் இறந்தவர்கள் பட்டியலில் உள்ளனர். பெரும்பாலானோர் தொகுதி மாறியவர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து புதிதாக வாக்காளர்களாகச் சேருபவர்களுக்கான சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி சார்பில் சனிக்கிழமை (டிச.20) வார்டு வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் என 3,718 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன.
The Election Commission has released the dates for the special camps for adding names to the voter list.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது